விண்வெளி வீரர்களுக்கான புதுவித உடையை  – நாசா!

Saturday, February 24th, 2018

சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பூமிக்கு வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் உபகோள்களில் தரையிறங்கும்போது விண்வெளி வீரர்கள் விசேட உடை அணிவது வழக்கமாகும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது குறித்த உடையினை வீரர்கள் பெரும்பாலும் அணிவதில்லை.

ஆனால் விண்வெளி நிலையத்திற்கு வெளியே செல்லும்போது இவ் உடை அணிவது அவசியம்.

எவ்வாறெனினும் தற்போது ஒரு உடையினை ஆகக்கூடுதலாக 10 மணி நேரமே அவர்கள் அணிகின்றனர்.

ஆனால் இனிவரும் காலங்களில் ஒரு உடையினை குறைந்தது ஆறு நாட்கள் வரை பயன்படுத்த வேண்டும் என நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தவிர வீரர்களின் மலங்களும் குறித்த உடையினுள்ளேயே சேமிக்கப்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுநீரை அகத்துறுஞ்சுவதற்கு வடிகுழாய் அமைப்பிலான கொண்டம் ஒன்றினையும் பயன்படுத்தவுள்ளனர்.

எனினும் தற்போது வடிவமைத்துவரும் இவ் உடையானது பெண் வீராங்கனைகளுக்கு பொருந்தக்கூடியதாக இல்லை என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts: