மீண்டும் சிக்கலில் கூகுள்!

Wednesday, August 15th, 2018

கூகுள் நிறுவனத்தின் அதிகளவான சேவைகளையே இன்று அனேகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றுள் இருப்பிடத்தினை அறிந்துகொள்ளும் Location சேவையும் ஒன்றாகும்.

இச் சேவை அவசியம் இல்லாத நேரங்களில் Off செய்து வைக்க முடியும்.

எவ்வாறெனினும் பயனர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை இச் சேவை Off நிலையில் இருக்கும் போதும் கூகுள் நிறுவனத்தினால் அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளின் அன்ரோயிட் பயனர்களே இச் சதிவலைக்குள் அகமாக சிக்கியுள்ளனர்.

இதேபோன்று ஆப்பிள் நிறுவனமும் இவ்வாறு பயனர்களின் இருப்பிடங்களை அறிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பாக முன்னணி நிறுவனங்கள் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கி பெருமளவில் தண்டப்பணம் செலுத்தியுள்ளன.

இதேபோன்று கூகுள் நிறுவனம் மீண்டும் சிக்கலை எதிர்நோக்கும் ஆபத்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: