மனித முகங்களைப் போன்ற பாறைகளைக் கொண்ட அருங்காட்சியகம்!
Friday, November 18th, 2016ஜப்பானின் Chichibu நகரில் அமைந்துள்ள பாறைகள் அருங்காட்சியகத்திற்கு தனிச்சிறப்புண்டு. காரணம், இங்குள்ள 1700 பாறைகள் மனிதர்களின் முகங்களை ஒத்திருப்பது தான்.
ஏனைய பாறைகள் மிக்கி மவுஸ் உள்ளிட்ட கார்ட்டூன்களின் முக அமைப்பை ஒத்திருக்கின்றன.Shozo Hayama என்பவர் 50 வருடங்களாக இந்த பாறை உருவங்களை சேகரித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததன் பின்னர் அவரது மனைவி Yoshiko Hayama வினால் இந்த அருங்காட்சியகம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.இயற்கையை விஞ்சிய ஓவியர்கள் உலகில் இல்லை என்பதே Shozo Hayama வின் நம்பிக்கையாக இருந்தது.
அதனடிப்படையிலேயே, அவர் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.இங்கு சாதாரண மனிதர்களின் முகங்களில் இருந்து இசைக்கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி, முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்கைல் கார்பச்சேவ் ஆகிய பிரபலங்களின் முகங்களை ஒத்த பாறைகள் வரை காணப்படுகின்றன.
Related posts:
|
|