பிளாஸ்டிக்கை அழிக்கும் பக்டீரியாக்களை ஜப்பான் கண்டுபிடித்தது.

Monday, March 14th, 2016

தற்போது எதற்கெடுத்தாலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிலை தான் உள்ளது.இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்திருந்தும் முற்றிலுமாக உபயோகப்படுத்தாமல் தவிர்க்க முடியாது.

விரைவில் அழியக்கூடிய தன்மை இல்லாததால் தெருக்களிலும், காலி இடங்களிலும் வீசப்படும் பொருட்களால் பல்வேறு விதமான நோய்களும், சுற்றுச்சூழலும் மாசடைகிறது.

பொதுவாக எல்லாவிதமான பொருட்களையும் பக்டீரியாக்கள் தின்று அழித்து விடும். இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு தவிர்க்கப்படும்.

ஆனால் பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் பக்டீரியாக்கள் சாப்பிடுவது இல்லை. இதன் காரணமாக அவை அழியாமல் பூமியிலேயே கிடக்கின்றன.

இந்நிலையில் ஜப்பான் விஞ்ஞானிகள், பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கக்கூடிய பக்டீரியாக்களை கண்டுபிடித்துள்ளனர்.

கொயட்டா மற்றும் கெயோ பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவிலேயே இவற்றை கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானிலுள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் ஆய்வு நடத்திய போது பக்டீரியாக்களை கண்டுபிடித்ததாக கூறும் விஞ்ஞானிகள், இவ்வகையான பக்டீரியாக்களை அதிகளவில் உற்பத்தி செய்து பரவவிட்டால் புதிய தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

Related posts: