நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் – சிக்கலில் நாசா!

Saturday, February 18th, 2017

உலகின் பல வகையான மர்மங்களுக்கு இன்று வரை விடை கூறப்பட வில்லை. ஒரு வகையில் பதில் கூற முடிந்த விடயங்களுக்கும் விஞ்ஞானிகள் பதிலைத் தருவதில்லை. அந்த வகையில் நிலவு வேற்றுக் கிரகவாசிகளின் மர்மத்தளம் என்று ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். என்றாலும் நாசா அதனை வெளிப்படையாக கூற வில்லை.

இந்த நிலையில் நிலவு வேற்றுக் கிரகவாசிகளின் மர்மத்தளம் அங்கிருந்து பூமி வேவு பார்க்கப்படுகின்றது என மேலைத்தேய ஊடகங்களில் அதிகளவான செய்திகள் வெளியிட்டு வருகின்றது.

நாசா 1972ஆம் ஆண்டு தனது அப்பலோ17 திட்டத்துடன் தனது நிலவுப் பயணத்தினை நிறைவு செய்து கொள்வதாக அறிவித்தது.

ஆனாலும் பின்னர் 2007ஆம் ஆண்டு விஞ்ஞானி ருட்லெஜ் என்பவர் அப்பலோ 20 என்ற இரகசியத் திட்டத்தில் பணி செய்ததாகவும் நிலவில் வேற்றுக்கிரக நகரம் ஒன்றினை கண்டு பிடித்தாகவும் கூறினார்.

அங்கிருந்து ஓர் வேற்றுக் கிரக பெண்ணின் உடலை ஆய்வுக்காக கொண்டு வந்தாகவும் தெரிவித்திருந்தார்.

பலர் இதனை மறுக்க அவர் ஆதாரங்களை காணொளிகளாகவே வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். என்றாலும் சில நாட்களிலேயே அவர் வெளியிட்ட காணொளி ஆதாரங்கள் அழிக்கப்பட்டதோடு தடை செய்யப்பட்டன.

என்றாலும் மீண்டும் அந்த ஆதாரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. ஒரு தரப்பு நிலவு பற்றிய இரகசியத்தை நாசாவே உடைத்தெறியவே இவ்வாறு செய்து வருவதாக கூறிவருகின்றது.

என்றாலும் அழிக்கப்பட்ட அந்த ஆதாரங்கள் மீண்டும் மேலைத்தேய ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டு வருகின்றது நாசாவிற்கு பல நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில் பிரபஞ்சம், விண்வெளி தொடர்பில் ஆய்வு செய்து கொண்டு வருகின்றவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் பூமியைத் தாக்க திட்டம் தீட்டுக் கொண்டு வருவதாக கூறி வருகின்றனர்.

அதேபோன்று தற்போது அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் (UFO) அதிகளவாக பூமியில் தென் பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது அம்பலமாகியுள்ள வேற்றுக் கிரகவாசிகள், நிலவு மர்மத்தளம் தொடர்பிலான விமர்சனங்களினால் நாசா சிக்கலைச் சந்தித்துள்ளதாகவும்.,இதன் காரணமாக நாசா தான் மறைத்து வந்த உண்மைகளை வெளிப்படுத்துமா அல்லது வழமைப் போல மூடி மறைக்குமா என்பது இப்போதைக்கு கேள்விக்குறியாகும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

Related posts: