அதிக குதிரை வலுவுடன் வருகைதரவுள்ள BMW M8!

Tuesday, October 11th, 2016

மக்கள் மனம் கவர்ந்த கார் வகைகளுள் BMW கார்களுக்கு என்றுமே முதல் இடம் உண்டு. இந் நிறுவனம் விரைவில் தனது புதிய காரான BMW M8 இனை அறிமுகம் செய்ய உள்ளது.

இக் காரானது முன்னைய கார்களை விடவும் பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி 800 குதிரை வலுக்கொண்ட எந்திரத்தினைக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக வெறும் 4 செக்கன்களில் ஓய்விலிருந்து மணிக்கு 62 மைல் வேகத்தை அடையக்கூடியாவறு உள்ளது. அத்துடன் 4 லீட்டர்கள் கொள்ளளவுள்ள இரு டேர்போக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் தம்பதிகள் பயணம் செய்யக்கூடிய வகையிலும், குடும்பத்தவர்கள் பயணம் செய்யக்கூடிய வகையிலும் இரு வகையான கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இவ் இரு வகைக் கார்களும் 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: