8 ஆயிரம் ஸ்டென்ட்ஸ் தேவை!

Friday, July 7th, 2017

அரசாங்க வைத்திய சாலைகளுக்கு ஆண்டொன்றுக்கு 8 ஆயிரம் ‘ஸ்டென்ட்ஸ்’ தேவைப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த ‘ஸ்டென்ட்ஸ்’ கொள்வனவு செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 640 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து மிகவும் தரவாய்ந்த ‘ஸ்டென்ட்ஸ்’ இறக்குமதி செய்யப்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: