75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புக்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி!

Friday, May 4th, 2018

இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 75 சதவீதமானவை ஆடைத்துறை தயாரிப்புக்களாகும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இவற்றின் வர்த்தக பெறுமதி சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் ரொறிஸூடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இதன்போது இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொது அரசாங்க சபை, வர்த்தக சபையின் மூலமான மேம்பாட்டு நிலை குறித்து ஆராயப்பட்டது.

Related posts: