72 கொள்கலன்கள் சுங்கத்திணைக்களத்தால் தடுத்துவைப்பு..!
Tuesday, November 29th, 2016
பிரேஸில் நாட்டிலிருந்து வந்த மேலும் 72 சீனிக் கொள்கலன்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சுங்கத் திணைக்களத்தில் பரிசோதனைகளுக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே வந்திருந்த 34 கொள்கலன்களில் சுங்கப் பரிசோதனையை மாத்திரம் முடித்துக்கொண்டு வெளியேறிய 20 கொள்கலன்கள் மீதான விசாரணை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இலங்கை வழியாக போர்த்துக்கல்லுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் அனுப்பப்படும் இத்தகைய கொள்கலன்களில் கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கொள்கலன்களைத் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சர்வதேச பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்திருப்பதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சுங்கத்தில் தடுத்துவைக்கப்படும் பிரேஸில் நாட்டு சீனிக்கொள்கலன்களை தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.அதற்கமைய அத்தகைய கொள்கலன்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரினதும் சுங்க அதிகாரிகளினதும் முன்னிலையில் கூட்டாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|