70 மில்லியன் ரூபாய் முறைக்கேடு – நாமல் ராஜபக்சவை செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, May 25th, 2022

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு கிரிஷ் என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: