6 இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்! – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, June 9th, 2021

இலங்கைக்கு தேவையாகவுள்ள ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அந்நாட்டிலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.

இதனால், இலங்கையில் தற்போது, இரண்டாவது மாத்திரை செலுத்துவதற்கு 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு, பற்றாக்குறையாகவுள்ள 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜப்பானிய பிரதமர் யொஷிஹிதே சுகாவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதற்கு தற்போது சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: