5000 ரூபா கொடுப்பனவுப் பணிகள் பூர்த்தி – காத்திருப்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை!

Wednesday, April 15th, 2020

நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு முதியோர்கள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் சமுர்த்தி குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த கொடுப்பனவு கிடைக்காமலோ அல்லது காத்திருப்பு பட்டியலில் இல்லாத முதியோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகளும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் சாரதிகளுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறி்ப்பிடத்தக்கது.

இதேநேரம் காய்கறிகளையும் மரக்கறி வகைகளையும் தூரப் பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்காக புகையிரதங்களை பயன்படுத்துவதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர் புகையித திணைக்கள மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


இலங்கையில் அதிகரித்த நைஜீரிய சைபர் குற்றவாளிகள் - நாடு கடத்தவும் அரசாங்கத்திடம் கணினி குற்றப் புலனாய...
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க யோசனை - அமைச்சர் தினேஷ் குணவர்தன தகவல்!
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு - 100 சந்தேக நபர்கள் அடையாளம் - மூ...