50 நாடுகளின் சுற்றுலாப் பிரஜைகள்  குழுவினர் யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் !

Thursday, July 14th, 2016

இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் உலக நாடுகளின் சுற்றுலா அபிவிருத்தி அமையத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மைக்கல் நிவாஸ் தலைமையிலான 50 நாட்டு சுற்றுலாப் பிரஜைகள் அடங்கிய குழுவினர் இன்று (14) யாழ். மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வமான விஐயமொன்றை மேற்கொண்டு வருகை தந்தனர்.

இரண்டு உலங்கு வானுர்திகளில் யாழ்ப்பாணம் சுப்பிரமணிய விளையாட்டு அரங்கில்  வந்திறங்கிய இவர்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். குறித்த பிரஜைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க்  கந்தசாமி ஆலயத்திற்கு விஐயமொன்றை  மேற்கொண்டதுடன்  அங்கு இடம்பெற்ற விசேட சமய நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து யாழ். நயினாதீவு நாக பூசணி  அம்மன் ஆலயத்திற்கும்,நாக விகாரைக்கும் சென்று சமய நிகழ்வுகளிலும் இவர்கள் பங்குபற்றினர்.

7af703d2-3e2c-4fef-854b-4b98df0c29fb

d0c26ff6-ca76-4b5f-83f7-248ad25bb233

Related posts: