5 பொலிஸாருக்கும் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Wednesday, August 23rd, 2017

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின்துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகம் மேற்கொண்ட 5 பொலிஸாரையும் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி வழக்கு விசாரணை யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இன்றையதினம் (22.08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த வருடம் ஒகடோபர் மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரு மாணவர்களும் உயிரிழந்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 5 பொலிஸார் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 5 பொஸாரையும் எதிர்வரும செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related posts: