5 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண உதவி வழங்கிய பங்களாதேஷ்!

Tuesday, June 6th, 2017

பங்களாதேஷ் அரசாங்கம் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியாக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது.

அந்நாட்டின் பிரதமர் சேக் ஹசினா (Sheikh Hasina) குறித்த தொகையை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.இதற்கு முன்பாக இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களுக்கு பங்களாதேஷ் பிரதமர் அனுதாபம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் றியாஸ் கமிதுல்லா  (Riaz Hamidullah ) வழங்கவுள்ளார்.

Related posts: