48 வகையான மருந்து வகைகளுக்கு விலை நிர்ணயம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Tuesday, October 18th, 2016

 

இலங்கையில் முக்கியமான பாவனையில் உள்ள வலி நிவாரணி, தொற்று நீக்கி உள்ளிட்ட மருந்து வகைகளுக்கு தீர்மான விலை நிர்ணயிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் வெகு விரைவில் சமர்பிக்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விலைப்பட்டியல் உலகில் பல நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மருந்து தொடர்பானது எனவும் ராஜித தெரிவித்தார். இதேவேளை, எதிர் காலத்தில் விலை கூடிய மருந்துகளுக்கும் இவ்வாறன தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கலாநிதி பிபிலவால் முன் வைக்கப்பட்ட யோசனை 45 வருடங்களுக்கு பின்னர் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.குறித்த மருந்துக்கள் தொடர்பான விலைப்பட்டியல் அனைத்து மருந்தகசாலைகளிலும் வைக்கப்படுவதுடன் இது தொடர்பான தெளிவூட்டல்களும் இடம்பெறும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

medi

Related posts: