4 வாள்கள் ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது!

Monday, September 7th, 2020

பல வருடத்துக்கு முன்பான வாள்கள் நான்குடன் ஒருவர் வடலியடைப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4 வாள்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தக் கைது நடவடிக்கை நேற்று 06 ஆம் திகதி இரவு இடம்பெற்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பான 4 வாள்களை விற்பனை செய்வதற்கு சந்தேக நபர் முற்பட்டுள்ளார்.

இந்த முயற்சி யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தெரிய வந்ததை அடுத்து வாள்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: