37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும் – கல்வி அமைச்சர்!

Friday, February 1st, 2019

முதலாம் தரத்திற்காக பாடசாலைகளில் 37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் அரசியல் செல்வாக்கு மற்றும் பல்வேறுப்பட்ட காரணங்களால் இந்த நடைமுறையை பின்பற்ற முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 வருட கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட செயற்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.26 தொழிற்பயிற்சி பாடங்களை உள்ளடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்தாலோ அல்லது சித்தியடையாவிட்டாலோ தங்களுக்கான தொழிற்துறையை தேடிக் கொள்ள முடியும்.ஒவ்வொரு மாணவர்களும் தங்களது திறமைகளை இனங் கண்டு கொள்ள வேண்டும்.

அந்த திறமையுடன் தொடர்புபட்ட தொழில் பயிற்சிகளை முன்னெடுக்கும் போது வாழ்கையை வெற்றி கொள்ள முடியும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts:

நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய உற்சவ காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றாக தடை - வேலணை பிரதேச...
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை திங்களன்று விடுவிக்க நடவடிக்கை - அத்தியாவசிய பொருட்கள்...
தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு கோப் குழு வ...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு – யோசனையை வ...
பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப...
சமூக நலத்திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதம் தொடர்பான சமுர்த்தி மற்றும் ஏனைய கொ...