3000 மெட்ரிக் தொன் அரிசியுடன் பாகிஸ்தானின் 3 கப்பல்கள் இலங்கைக்கு!

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள 3000 மெட்றிக் தொன் அரிசியை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை அனுப்பி வைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்திருந்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 25 மெட்றிக் தொன் அரிசி பாகிஸ்தான் விமானப்படை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மேலும் மூன்று விமானங்களில் பாகிஸ்தான் அரிசியை அனுப்பியிருந்தது.
இதனையடுத்தே மூன்று கப்பல்களில் 3000 மெட்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கப்பல்கள் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கொழும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவற்றை பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் சையிட் சகீல் ஹுசேன், இலங்கை பிரதமரிடம் கையளிக்கவுள்ளார்.
எஞ்சிய 7000 மெட்ரிக் தொன் அரிசி, ஏப்ரல் மாத முடிவுக்குள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போதெல்லாம் பாகிஸ்தான் உதவிகளை வழங்கி வந்துள்ளது.
இலங்கை வலுவான இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ள பாகிஸ்தான், அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஸ்ரீலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|