283 ஆயுர்வேத வைத்தியர்கள் புதிதாக நியமனம்!

Wednesday, March 22nd, 2017

283 ஆயுர்வேத வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் எல்.பி.எஸ்.திலகரட்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு நிதி அமைச்சின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத, சித்த, யுனானி ஆகிய துறைகளுக்காக இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள். இதன் கீழ் 45 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இதேவேளை, வடமேல், ஊவா மாகாணங்களுக்காக 25 ஆயுர்வேத வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னுரிமை ஆவணத்திற்கமைய இவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். கூடுதலான வைத்தியர்களை ஆயுர்வேத துறைக்கு இணைத்துக் கொள்ள எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: