சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க!

Tuesday, May 8th, 2018

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவருவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி வங்கியை விரைவில் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழேயே சமுர்த்தி வங்கி இயங்குகின்றது இதன் காரணமாக மத்திய வங்கியின் கீழ் கொண்டுவர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

சமுர்த்தி சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரதமருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதைத் தடுக்கப் போகிறோம்.

மத்திய வங்கியை பட்டப்பகலில் கொள்ளையடித்தார்கள் நாங்கள் ஏழை மக்களின் பணத்தில் பிரதமர் கைவைப்பதற்கு அனுமதிக்கமாட்டோம். மக்கள் மத்திய வங்கியை தற்போது நம்புவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: