23 ஆண்டுகளில் இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கை உயரும்!

Friday, June 8th, 2018

சிறிலங்காவின் தற்போதைய வயது நிலை தொடர்ந்தால் அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று நிதியமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.

1981 ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 6.6 வீதமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டு இது 12.4 வீதமாக அதிகரித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 15.5 வீதமாக உயர்ந்தது. இந்நிலை தொடர்ந்தால் 2041 ஆம் ஆண்டில் சனத்தொகையில் 24.8 வீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர்.

Related posts: