2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள் இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை – அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின், 2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள், இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவின் ஊடாக அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின், முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் தொடர்பில், கலந்துரையாடுவதற்கு, அதன் உறுப்பினர்கள், அரச கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், அவர்கள் தயார்ப்படுத்தலின்றி கூட்டத்தில் முன்னிலையாகி இருந்தமையால், வெறுமையாகவே கூட்டத்தை நிறைவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்றுள்ளதாகக்கூறி, கொழும்பு துறைமுக நகர ஆணைக்கழுவின் தலைவர், கூட்டத்தில் முன்னிலையாகவில்லை.

அத்துடன், ஆணைக்குழுவின் பிரதான நிறைவேற்று அதிகாரி தொடர்பில் தகவல் இல்லையெனவும், கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related posts: