கொரோனா வைரஸை முற்றுமுழுதாக இல்லாதொழிப்பது கடினம் – சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க!

Sunday, May 3rd, 2020

கொரோனா வைரஸ், கட்டுப்படுத்தும் மட்டத்தில் இருந்தாலும் அந்த வைரஸை “பூஜ்ஜியம்” நிலைக்கு கொண்டுவருவது கடினம் என சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, சமூக இடைவெளியை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பதே சிறந்த முறைமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகுக்கே வியாபித்திருந்தும் ஏனைய தொற்று நோய்களை போல, இந்த கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் உருவாகாமல் இருக்கவேண்டுமாயின் சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனிதர்களுக்கு தொற்றும் ஒரேயொரு தொற்றுநோய் கொரோனா வைரஸ் மட்டும் இல்லை என்றும் ஏனைய தொற்று நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லையெனில், அதுவும் ஆபத்தானது எனவும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, மூன்றாவது அலை ஏற்படக்கூடும் எனவும் அந்த அலைகள் முதலாவது அலையை போன்று ஆபத்தானதாக இருக்காது என்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: