2020 / 2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Thursday, December 30th, 2021

2020/2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அனைத்து மருத்துவ பீடங்களும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்துக்கான இளங்கலைப் பட்டதாரிகள் ஜனவரி 3ஆம் திகதி முதல் இணைத்துகே கொள்ளப்படவுள்ளதுடன், ஏனைய பீடங்கள் இளங்கலைப் பட்டதாரிகளின் ஆட்சேர்ப்பைப் பின்பற்றி ஜனவரியில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்.

இருப்பினும், புதிய இளங்கலை பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு முன்னர் பல்கலைக்கழகங்கள் நான்காம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். இதற்கமைய, நான்காம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்யும் பல்கலைக்கழகங்கள், 2020/2021 கல்வியாண்டுக்கான இளங்கலைப் பட்டதாரிகளின் கல்வி நடவடிக்கைகளும் விரைவில் ஆரம்பிக்கப்ப்டும்.

2020/2021 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 16ஆம் திகதியுடன் முடிவடைந்தது. பல்கலைக்கழக நுழைவு 38,000 விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: