2000 ரூபா கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு சில தினங்களில் வழங்க நடவடிக்கை – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

Sunday, August 29th, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுற்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இதுவரையில் 5 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் 36 ஆயிரம் குடும்பங்களுக்கு தற்போது 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மொனராகலை மாவட்டத்தில் 48 ஆயிரத்து 602 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை மாவட்டத்தில் 6 கோடி 50  இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: