2  இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி!

Tuesday, October 24th, 2017

வெளிநாடுகளிலிருந்து 2 லட்சம் மெட்ரிக் டொன் அரிசி வகைகளை உடனடியாக இறக்குமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். .

இந்தியா பாக்கிஸ்தான் மியன்மார் கம்போடியா வியட்நாம் தாய்லாந்து மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்தவகையில் நாட்டரிசி 90000 மெட்ரிக்டொன் சம்பா அரிசி 60 ஆயிரம் மெட்ரிக் டொன் வௌ்ளை பச்சையரிசி 50 மெட்ரிக் டொன் ஆகியவற்றை இறக்குமதி செய்ய கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விலைகள் பெற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: