1996 இல் இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது பற்றி விளக்கும் அர்ஜீன ரணதுங்க!

Tuesday, March 22nd, 2016

1996ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளின் பொழுது அநாவசிய அரசியல் தலையீடுகள் இருக்கவில்லை இதுவே போட்டியை வெற்றிக் கொள்வதற்கான பிரதான இரகசியமென  உலகக்கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தள்ளார். இலங்கை துறைமுக அதிகார சபையின் விளையாட்டு பிரிவு மற்றும் சேவ் த ஸ்போர்ட் விளையாட்டு நிறுவணம் ஆகியன ஒன்றினைந்து ஏற்பாடு செய்த 96 கொண்டாடுவோம் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இக்கருத்தினை வெளியிட்டார்-

அவர் மேலும் தெரிவித்ததாவது –

ஒரே தடவையில் அணியொன்றை உருவாக்க இயலாது. பல ஆண்டுகளாக பாடுபட்டே அணியொன்றை உருவாக்க வேண்டும். 96ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளிற்கு ஆயத்தமாகும் பொழுது இரண்டு ஆண்டுகளிற்கு முன்னரே எந்தெந்த அணிகளுடன் விளையாட வேண்டுமென்று முடிவெடுத்தோம். இச்சந்தர்ப்பத்தில் நான்கு மூத்த விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள். துலிப் மென்டிஸ் தெரிவுக் குழுவின் தலைவராக செயற்பட்டார். கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஆனா புஞ்சி ஹேவா செயற்பட்டார்.

அவர் தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை. அணியை தேர்வுச் செய்யவும் இல்லை. விளையாட்டு துறை அமைச்சருடன் கதைக்கவும் இல்லை. அதாவது எவ்வித அரசியிற் தலையீடுகளும் இருக்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் இவையனைத்தும் அரங்கேறியது. அநாவசிய தலையீடுகள் காரணமாக வீரர்கள் மன உளைச்சலிற்காளாகியுள்ளார்கள். எதனையும் அறியாதவர்கள் விளையாட்டில் ஈடுப்படாதவர்கள் ஒரு போதும் துடுப்பு மட்டையை கைகளால் பிடிக்காதவர்கள் தங்களுக்கு புகழை சேர்த்துக்கொள்ளும் பொருட்டு கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பிரதிபலனாக கிரிக்கெட் அணி பலவீனமடைந்தது. இன்று பணமே முன்னிலையிலுள்ளது.

96ம் ஆண்டு உலக கிண்ண கோப்பையை வெற்றிக் கொண்ட பொழுது அமெரிக்க டொலர் 30 000 பணப்பரிசில் கிடைத்தது. அன்று ஒரு டொலரின் பெறுமதி ரூபாய் 70 -80 வரையில் காணப்பட்டது. 14 பேரும் அப்பணத்தை பிரித்து எடுத்தோம். அன்று பணத்தை பற்றி பெரிய எண்ணங்கள் இருக்கவில்லை. வெற்றிக்கே மதிப்பளித்தோம். இதற்கான சிறந்த உதாரணம் யாதெனில் என்னிடம் காசோலையை கையளித்தார்கள். உலக கிண்ணத்தையும் கையளித்தார்கள். அப்பொழுது அங்கிருந்த மக்களின் மேல் மோதுண்டமையினால் நான் கீழே விழுந்தேன். அப்பொழுது நான் உலக கிண்ணத்தை பற்றி பிடித்துக் கொண்டேன் காசோலை நழுவி கீழே விழுந்ததென …’ முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்.

96 கொண்டாடுவோம் நிகழ்வினை இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் விளையாட்டு பிரிவு மற்றும் சேவ் த ஸ்போர்ட் நிறுவணம் ஆகியன ஒன்றினைந்து ஒழுங்கு செய்தது. விளையாட்டு பயிற்சி முகாம் விளையாட்டு தொடர்பாக கலந்துரையாடல் மற்றும் மக்கள் சேவை ஆகியன இந்நிகழ்வுகளில் உள்ளடங்கிருந்தது.

Related posts: