15 – 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி – ஒரு டோஸ் மாத்திரமே வழங்கப்படும் என தொற்று நோய் தொடர்பான விசேட குழு அறிவிப்பு!

Thursday, October 7th, 2021

15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட தேக ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்தும் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் தொற்று நோய் தொடர்பான விசேட குழுவினால், சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தொற்று நோய் தொடர்பான விசேட குழுவின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சதிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு பைசர் ஒரு மருந்தளவை மாத்திரம் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: