15ம் திகதிவரை.பொ.த.சா.தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம்!
Wednesday, June 14th, 20172017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குறித்த தினத்திற்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி மே 31 நிறைவடைந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த கால எல்லை ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை தேயிலைக்கு வயது 150!
மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீருங்கள் - இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் கல்வி அமைச்சுக்குக் கடிதம்!
கந்தரோடையில் ஆயுத முனையில் அச்சுறுத்தி பெரும் நகைக் கொள்ளை – மூவர் சந்தேகத்தில் கைது!
|
|