129 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Friday, February 5th, 2021

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 129 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளில் பெரும்பான்மையானவர்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாயில் இருப்பதாகவும் சிலர் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

தப்பியோடியவர்களில் 40 பேர் இலங்கையில் நிதிக் குற்றங்கள் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதாள உலக குழுவின் உறுப்பினரும், போதைப்பொருள் வர்த்தகருமான “கிம்புலா எல குணாவை” இந்தியாவில் இருந்து நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Related posts: