11 ஆயிரம் ரூபா மில்லியன் செலவில் AB39 வழுக்கையாறு புங்குடுதீவு குறிகாட்டுவான் வீதி இவ்வாண்டு புனரமைப்பு!

2019 புதுவருடத்தில் இருந்து வடக்கின் பிரதான வீதிகள் மூன்று காபெட் வீதிகளாக மாற்றமடையவுள்ளது. ஒரு கடற்பாலத்துடன் கூடிய மூன்று வீதிகள் காபெட்வீதிகளாக மாற்றப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மாவட்டப்பொறியியலாளர் வி சுதாகர் தெரிவித்துள்ளார்.
AB21 யாழ்ப்பாணம் பொன்னாலை பருத்தித்துறை வீதி, AB17 யாழ்பாணம் மானிப்பாய் காரைநகர் வீதி, AB39 வழுக்கையாறு புங்குடுதீவு குறிகாட்டுவான் வீதி ஆகிய வீதிகளே புணரமைக்கப்படவுள்ளது.
AB21 சாலைக்கு 700 மில்லியன் ரூபாவும், AB17 சாலைக்கு மூவாயிரத்து 300 மில்லியன் ரூபாவும், AB39 சாலைக்கு 11 ஆயிரம் மில்லியன் ரூபாவும் மதிப்பீடு செய்யட்டுள்ளது. வழுக்கையாறு குறிகாட்டுவான்வீதியில் அராலியில் பாரியகடற்ப்பாலம் அமைக்கப்படும்.
முதற்கட்டமாக 14 கிலோமீற்றர் நீளமுள்ள AB21 யாழ் பொன்னாலை வீதி உலக வங்கியின் நிதியொதுக்கீட்டின் கீழ் எதிர்வரும் ஆவணி மாதம் முதல் பண்ணையிலிருந்து வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Related posts:
|
|