100 மில்லியனில் நாடாளுமன்றிற்கு புதிய மின்தூக்கி!

Friday, February 22nd, 2019

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதிய மின்தூக்கிகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சபாநாயகரின் அறிவித்தலை பிரதி சபாநாயகர் சபையில் வாசித்தார்.

இதற்கமைய, 100 மில்லியன் ரூபா செலவில் 10 புதிய மின்தூக்கிகளைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்தார்.

அத்தியாவசியம் என உணரப்பட்டால் இந்தளவு செலவை மேற்கொண்டு மின்தூக்கிகளைப் பொருத்துவது தொடர்பில் பிரச்சினை இல்லை.

எனினும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வளவு வேகமாக செயற்படுகின்றனரா என்பதே மக்களின் கேள்வியாகும்.

மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தொகுதியில் படிக்கட்டுகளை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இருந்தும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வேகத்திலும் பார்க்க கூடுதல் வேகத்துடன் இவ்விடயம் தொடர்பில் கரிசனை செலுத்தப்படுகின்றமை மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Related posts: