10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதை இன்று தீமூட்டி அழிப்பு!

Thursday, November 23rd, 2017

யாழ்.நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதை இன்று தீமூட்டி எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குள் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் மன்றில் பாரப்படுத்தப்பட்டு இருந்தன. அவ்வாறு பாரபப்டுத்தபப்ட்ட கஞ்சா போதை பொருளில் வழக்குகள் முடிவடைந்த நிலையில் காணப்பட்ட கஞ்சா போதை பொருள் நீதிமன்ற உத்தரவில் எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மற்றும் அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் முன்னிலையில் அவை எரித்து அழிக்கப்பட்டது. அவ்வாறு இன்றைய தினம் எரிக்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.

Related posts: