8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சியுடன் ஒரு இலட்சம் பேருக்கு அரச சேவையில் நியமனம்!

Saturday, January 11th, 2020


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

“அபிவிருத்தி உதவியாளர்கள் சேவை” என்ற புதிய பதவியை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறைந்த கல்வித் தகுதிகளுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related posts: