குடாநாட்டை மிரட்டும் கொள்ளையர் குழுவை அடக்கஅவசர கூட்டத்திற்கு ஏற்பாடு!
Monday, April 25th, 2016குடாநாட்டில் அண்மைக்காலமாக என்றுமில்லாதவாறு கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இதுகுறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) யாழ் கச்சேரியில் அரச அதிபர் தலைமையில் விசேட கூட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்களாக, தற்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் வூட்லர் ஆகியோர் கடமையாற்றியபோது அங்கு பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த குற்றச்செயல்கள் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை மாத்திரம் யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய், இளவாலை, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள நான்கு வீடுகளில் கொள்ளையர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளார்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது தொடர்பில் ஆராய, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
கதிர்காமக் கந்தன் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!
தோழர் மித்திரனின் தாயாருக்கு ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை - புலம்பெயர் தேசங்களிலிருந்து...
அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக கூறவில்லை – ஆனால் மக்கள் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றன...
|
|