விஞ்ஞான பிரிவில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கல்வியமைச்சு!

Saturday, September 7th, 2019


விஞ்ஞான பிரிவில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவதாக அதிகரித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு 38 ஆயிரத்து 42 மாணவர்கள் உயர்தர விஞ்ஞான பிரிவில் தோற்றியிருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 41 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைய சில வருடங்களாக முன்னெடுக்கப்படும் சிறப்பு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய அந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: