மின் ஒழுக்கு: குடிசை வீடு முற்றாக அழிவு – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக வீடமைத்து கொடுக்க ஈ.பி.டி.பி. நடவடிக்கை!

Tuesday, December 10th, 2019


மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகிய நிலையில் பரிதவிக்கும் குடும்பத்தினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அக் குடும்பத்தின் அவசர தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் அராலி மத்தியில் மின் ஒழுக்க காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் முத்துக்குமார் இரத்தினசிங்கம் அவர்களது சிறிய வீடு  தீயில் முற்றாக எரிந்து சாம்பராகியது.

வீடு மற்றாக எரிந்த நிலையில் தற்போது பெய்யும் அடை மழை காரணமாக குறித்த குடும்பம் பெரும் அவலத்தை எதிர்கொண்டிருந்தது.

இதனையடுத்து குறித்த குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுர பாலகிருஸ்ணன் துறைசார் அரச அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டு தற்காலிக வீடு ஒன்றை அமைத்து கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

Related posts: