மாலைதீவு தொடர்பான முன்மொழிவை வரவேற்றுள்ள இலங்கை !

Monday, September 30th, 2019


மாலைதீவை பொதுநலவாயத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளதாக  வெளிநாட்டலுவல்கள் அமைச்சு  அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில், மாலைதீவை பொதுநலவாயத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க வரவேற்றார்.

மாலைதீவை பொதுநலவாய குடும்பத்தில் மீள அனுமதிப்பதற்கான முன்மொழிவை வெளிவிவகார செயலாளர் ரவீநாத ஆரியசிங்க கடந்த வியாழக்கிழமை வரவேற்றதுடன், ருவாண்டாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு 2020 இல் மாலைதீவு முழுமையாக பங்கேற்பதனை அனுமதிப்பதற்காக, காம்பியாவை மீள அனுமதிப்பதற்கான நடைமுறையில் முன்னர் பயன்படுத்தப்பட்ட விரைவான பாதையை பிரயோகிப்பதற்கான இலங்கையின் முழுமையாக ஆதரவினை மீண்டும் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வின் பக்க நிகழ்வுகளில் ஒன்றாக,பொதுநலவாயம் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் விம்பிள்டன் பிரபு அஹ்மத் அவர்களின் தலைமையில் 2019 செப்டம்பர் 26 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில், அவர் இந்த அவதானிப்பை மேற்கொண்டார். டுநெருங்கிய அண்டை நாடாகவும் சக தெற்காசிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்கும் மாலைதீவுடன் வலுவான இருதரப்பு உறவுகளை இலங்கை அனுபவித்து வருவதுடன், கடந்த வருடத்தில் மாலைதீவின் புதிய நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதன்மை முயற்சிகளில் ஒன்றான, பொதுநலவாயத்தில் மீண்டும் இணைவதற்கான தனது நோக்கத்தை தெரியப்படுத்தியமை மகிழ்ச்சிகரமான ஒன்றாகும்டு என ஆரியசிங்க தெரிவித்தார்.

குறிப்பாக 2019 ஜனவரியில் பொதுநலவாய செயலகத்தினால் மாலைதீவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான மதிப்பீட்டுப் பணியானது,நேர்மறையான தீர்மானத்திற்கு வழிவகுத்ததுடன் அதன் மீள் நுழைவுக்கு எதிரான எந்தவொரு தடைகளும் அவ்வப்போது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் வெறும் குறைபாடுகளாகவே கருதப்பட வேண்டும் என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். குறைவான ஊக்குவித்தல்களுக்கு வழிவகுக்கும் மேலதிக தடைகள் அவர்களின் பாதையில் வைக்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

2019 செப்டம்பர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் நடைபெற்ற குழு 77 (ஜி 77) வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்திலும் வெளிவிவகார செயலாளர் கலந்து கொண்டார். குறை விருத்தி நாடுகள், நிலத்தால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகள் போன்ற சிறப்பு சூழ்நிலைகளில் உள்ள நாடுகளின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பதற்காக ஜீ 77 தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

Related posts: