பேஸ்புக் நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

Tuesday, November 12th, 2019


இலங்கையில் தேர்தல் தொடர்பான பதிவுகளை கட்டுப்படுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான கண்காணிப்பாளர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். பெப்ரலின் கோரிக்கையின்படி தேர்தலுக்கு முன்னர் 48 மணித்தியாலங்களில் பிரசாரங்கள் நிறுத்தப்படவேண்டும்.

வாக்காளர்களில் செல்வாக்கு செலுத்தும் வகையிலான பிரசாரங்களை பேஸ்புக் நிறுவனம் கட்டுப்படுத்தவேண்டும் என்று இந்தக் கோரிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமது கோரிக்கைக்கு பேஸ்புக் நிறுவனம் சாதகமான பதிலை வழங்கும் என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related posts:

கலைப்பிரிவு மாணவர்களுக்கு விசேட கற்கைத் திட்டம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தெரிவிப்பு!
கொரோனாவின் நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் – அமைச்சர் நாமல் வலியுறுத்து...
எவரையும் கைவிடாதீர்கள் நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - நலன்புரி நன்...