புதிய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

Thursday, November 21st, 2019


வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகள் மற்றும் பெயர் பலகைகளை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஜாஎல பகுதிக்கு அருகிலுள்ள வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்கள் அடங்கிய பதாதைகள் மற்றும் பெயர் பலகைகளை நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜாஎல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளரான நகர சபை உறுப்பினர் நாமல் சுரங்க தனது படங்கள் அடங்கிய பதாதைகளை நீக்கியுள்ளார்.

பொது மக்களின் வரிப்பணத்தில் அபிவிருத்தி செய்யப்படும் வேலைத்திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் புகைப்படம் அடங்கிய பதாதைகளை காட்சிப்படுத்துவது தகுதியற்ற செயல் என நாமல் சுரங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கமைய தான் இந்த செயலை செய்ததாக அவர் மேலும் தெரிவித்துளளார்.

Related posts: