பாதுகாப்பு ஸ்டிகர் ஒட்டப்படாமல் மதுபானம் விற்பனை செய்ய தடை – நிதி அமைச்சு!

Wednesday, July 31st, 2019

இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான மதுபானங்களுக்கும் கலால் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பாதுகாப்பு ஸ்டிகர் ஒட்டப்படாமல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றைல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றுமுதல் குறித்த ஸ்டிகர் ஒட்டப்படாத வெளிநாட்டு மதுபானங்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லல் மற்றும் விற்பனை செய்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த விதிமுறைகள் உள்ளடங்கிய அதிவிஷேட வர்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் மங்கள் சமரவீரவினால் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன் அது ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான மதுபானங்களுக்கும் இந்த விதிமுறையை தற்பொழுது முதல் நடைமுறைப்படுத்துவதுடன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: