தலைமன்னார் – இந்தியாவிற்கு நேரடி கப்பல் சேவை? – அமைச்சர் ஜோன் அமரதுங்க!

தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்ப இலங்கை விருப்பத்துடன் உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இயல்பற்ற சூழ்நிலை காரணமாக இந்த கப்பல் சேவை கடந்த 10 ஆண்டுகளாக இடம்பெறவில்லை. இந்தநிலையில் இதனை ஆரம்பிக்க இந்தியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணிகள் கப்பல் சேவையில் பயணிகள் மாத்திரமல்ல இந்தியாவில் இருந்து வாகனங்கள் உட்பட்ட உபகரணங்களையும் எடுத்துவரமுடியும்.
அத்துடன் இந்திய உல்லாசப்பயணிகளையும் அதிகளவில் இலங்கைக்கு வரவழைக்கமுடியும் என்றும் அமைச்சர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
Related posts:
133 பொருட்களுக்கும் 21 சேவைகளுக்கும் 'வற்' தவிர்ப்பு!
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை - ஜனாதிபதியின் அதிரடி!
எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சைகள் ...
|
|