தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கங்கள் மீண்டும் ஐக்கியத்துடன் நீதி கோரி யாழ் நகரில் மாபெரும் போராட்டம்!

Saturday, October 5th, 2019

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சம்வபத்தைக் கண்டித்தும், நீதியை வலியுறுத்தியும் யாழ் நகரில் மாபெரும் போராட்டமொன்று  தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைந்த பங்களிப்புடன் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் நடைபெற்றது.

இதன் போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றலில் எரிக்கப்பட்டதை கண்டித்தும் அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரைக் கைது செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இப் போராட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ரெலோ , புளொட் உள்ளிட்ட பலதரப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பிர் றெமீடியஸ்  –  (கீழுள்ள வீடியோ இணைப்பை அழுத்தவும்)

Related posts: