டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்திருந்தால் வீதியில் போராடவேண்டிய நிலை உருவாகியிராது – யாழ்.பல்கலை வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டோர் தெரிவிப்பு!

Thursday, September 19th, 2019

தமது வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தாம் தற்காலிகமாக முன்னெடுத்துவந்த தொழில் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் நிரந்தரமாக்காது பறிக்கப்படுவதால் தமது எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை தாம் போராடவுள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பணிகளுக்கென அண்மையில் நடைபெற்ற உள்ளீர்ப்பு பட்டியலில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த உள்ளீர்ப்பில் தமது பெயர் விபரங்கள் உள்ளிர்க்கப்படாமையால் பாதிப்படைந்தவர்கள் சுழற்சி முறையில் பல்கலைக்கழக வயிலில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

சில வருடங்களாக தாம் ஒப்பந்த அடிப்படையில் தொழில் புரிந்து வந்த நிலையில் அண்மையில் பல்கலைக்கழகத்திற்கு தொழிலாளர்களாக உள்வாங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தாம் அதற்கு விண்ணப்பித்திருந்தோம். ஆனாலும் அது தற்போது திட்டமிட்ட வகையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

எமது மாவட்டத்தை பொறுத்தளவில் பல ஆயிரம் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்ற நிலையில் பிறமாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு இங்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதானது எமது தொழில் வாய்ப்புக்கான அடிப்படை உரிமையும் பறிக்கப்படுவதாகவே இருக்கின்றது.

கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த போது எமது இளைஞர் யுவதிகளுக்கு எமது மாவட்டத்தின் தொழில் வெற்றிடங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அதில் வேற்றுமைகள் பாரபட்சங்கள் எதுவும் காணப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் தற்போது அவ்வாறான ஒரு நிலைமை காணப்படவில்லை.

அதுமட்டுமல்லாது அன்று எமது இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பு இடங்களிலோ அன்றி அடிப்படை தேவைகள் விடயங்களிலோ பிரச்சினைகளை எதிர்கொண்ட போது டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு அவர்களை வீதிகளுக்கு இறங்கி போராடும் நிலைக்கும் தள்ளியிருக்கவில்லை.

மாறாக உடனடியாக தீர்வு காண்பவற்றுக்கு தொலைபேசி அழைப்பினூடாகவும் ஏனைய விடயங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சிறிய கால அவகாசத்திற்குள்ழும் தீர்வுகளை பெற்றுக் கொடுத்திருந்தார். ஆனால் இன்று அதிகாரத்திலுள்ள தரப்பினரால் அவ்வாறு மேற்கொள்ள முடியவில்லை. அத்துடன் அவர்கள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரவும் முயற்சிக்கவில்லை.

எனவே நாம் எதிர்கொண்டுவரும் குறித்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே யாழ் பல்கலைக்கு தொழிலாளர்களாக உள்ளீர்க்கப்பட்டவர்கள் எவ்வாறு? எந்த வகையில்? என்ன அடிப்படையில் உள்ளீர்க்கப்பட்டனர் என்பது தொடர்பாக விளக்கம் தரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  நாடாளுமன்றில் அமைச்சர் ரவூப் ஹகீமிடம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: