ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!
Saturday, September 21st, 2019ஜனாதிபதித் தேர்தலுக்காக 6 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்ளிட்ட மூவர் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக அபரெக்கே புன்யானந்த தேரரும் அபே ஜனபல சார்பில் சமன் பெரேராவும் இன்று கட்டுப்பணம் செலுத்தினர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா ஆகியோர் நேற்று கட்டுப்பணம் செலுத்தினர்.
Related posts:
ஆசிய பிராந்தியத்தின் சிறந்த பொலிஸ் சேவையாக இலங்கையின் பொலிஸ் சேவை தரம் உயர்த்தப்படும் - பிரதமர்!
திங்கள்முதல் 1,500 பேருந்தகள் மேலதிக சேவையில் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் – குடிவரவு மற்றும் குடியகல...
|
|