சேவையை வழங்க தயார் நிலையில் யாழ். சர்வதேச விமான நிலையம்!

Friday, October 11th, 2019


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எதிவரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. அத்துடன், சிவில் விமான சேவைகள் நிறுவனம், விமான நிலையத்துக்கான ஏனைய உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள், நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் அனைத்து அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Related posts: