சடலங்ளை இனங்காண புதிய நடைமுறை – கொழும்பு பிரதான சட்ட வைத்தியர்!

Sunday, September 1st, 2019


அனைத்து இலங்கையர்களினதும் கைரேகை அடையாளங்களை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு கிடைக்கும் அடையாளம் தெரியாத சடலங்களை இனம் காண, கைரேகை உதவியாக இருக்கும் என கொழும்பு பிரதான சட்ட வைத்தியர் அஜித் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு வருடத்திற்கு 150 அடையாளம் காண முடியாத சடலங்கள் கிடைக்கின்றன. அவற்றினை அடையாளம் காண்பது சிக்கலாகியுள்ளதாக சட்ட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையில் அடையாளம் காண முடியாத சடலங்களுக்கு அரச செலவில் இறுதி சடங்கு நடத்தப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் வாகன விபத்துக்களில் உயிரிழப்போரின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை ஏற்படுகிறது.

இவ்வாறான குழப்பமான நிலையை தவிர்ப்பதற்காக நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களின் கைவிரல் அடையாளங்களை பெறுவதன் மூலம் தீர்வு காண முடியும் என சட்ட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: