கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு !

Monday, August 12th, 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக ரீதியான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக 2019 வாக்காளர் பெயர் பட்டிலில் உள்ளடக்கப்படவுள்ள ஏ.பி பட்டியலை வெளியிடும் தினம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.இன்றையதினம் இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்படவுள்ளது.2019 ஆம் வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அத்தாட்சிபடுத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், வாக்காளர் படிவங்களை மீள கையளித்தல், அவற்றில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடி ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதனை அத்தாட்சிப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

Related posts:

வேலைவாய்ப்பில் 2013/2014 பட்டதாரிகளையும் உள்ளீர்க்குமாறு கோரி ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் யாழ்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாளைமறுதினம் நாடாளுமன்றில் விவா...
நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் – சுகாதார அதிகாரிகள் ...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுற்றறிக்கைக்குள் வரையறைப்படாது உதவிகளைக் கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதிமைத்...
கேரதீவு - சங்குப்பிட்டி வீதியில் வாகனங்களுக்கு இடையூறாக புகைப்படம் எடுக்கும் பயணிகளால் அசௌகரியம் சார...
கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் - விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரை!