கிளிநொச்சியில் சோகம்: மூவரின் நிலை..!

Wednesday, October 2nd, 2019


கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் இருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த இரண்டு லொறிகளுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வேன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பத்தில் வேன் சாரதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளதோடு, லொறி சாரதி மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணி்த்த நபர் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: